225 110. குறிப்பறிதல் - Signs speak the heart | |
1. இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோககொன் றந்நோய் மருந்து. | Her painted eyes, two glances dart One hurts; the other heals my heart.
| 1091 | |
2. கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் செம்பாகம் அன்று பெரிது. | Her furtive lightning glance is more Than enjoyment of sexual lore.
| 1092 | |
3. நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள் யாப்பினுள் அட்டிய நீர். | She looked; looking bowed her head And love-plant was with water fed.
| 1093 | |
4. யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும். | I look; she droops to earth awhile I turn; she looks with gentle smile.
| 1094 | |
5. குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண் சிறக்கணித்தாள் போல நகும். | No direct gaze; a side-long glance She darts at me and smiles askance.
| 1095 | |
6. உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல் ஒல்லை உணரப் படும். | Their words at first seem an offence But quick we feel them friendly ones.
| 1096 | |
7. செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும் உறாஅர்போன்று உற்றார் குறிப்பு. | Harsh little words; offended looks, Are feigned consenting love-lorn tricks.
| 1097 | |
8. அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப் பசையினள் பைய நகும். | What a grace the slim maid has! As I look she slightly smiles.
| 1098 | |
9. ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்ணே யுள. | Between lovers we do discern A stranger's look of unconcern.
| 1099 | |
10. கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல. | The words of mouth are of no use When eye to eye agrees the gaze.
| 1100 | |
|