பக்கம் எண் :

227
111. புணர்ச்சி மகிழ்தல் - Embrace bliss
 

1. கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஓண்டொடி கண்ணே உள.

In this bangled beauty dwell
The joys of sight sound touch taste smell.

1101
 

2. பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.

The cure for ailment is somewhere
For fair maid's ill she is the cure.

1102
 

3. தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.

Is lotus-eyed lord's heaven so sweet
As sleep in lover's arms so soft?

1103
 

4. நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்.

Away it burns and cools anear
Wherefrom did she get this fire?

1104
 

5. வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்.

The arms of my flower-tressed maid
Whatever I wish that that accord.

1105
 

6. உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்.

My simple maid has nectar arms
Each embrace brings life-thrilling charms.

1106
 

7. தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு.

Ah the embrace of this fair dame
Is like sharing one's food at home.

1107
 

8. வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.

Joy is the fast embrace that doth
Not admit e'en air between both.

1108
 

9. ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.

Sulking, feeling and clasping fast
These three are sweets of lover's tryst.

1109
 

10. அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.

As knowledge reveals past ignorance
So is the belle as love gets close.

1110