233 114. நாணுத் துறவுரைத்தல் - Decorum defied | |
1. காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம் மடலல்லது இல்லை வலி. | Pangs of passion find no recourse Except riding *'palmyra horse'.
| 1131 | |
2. நோனா உடம்பும் உயிரும் மடலேறும் நாணினை நீக்கி நிறுத்து. | Pining body and mind lose shame And take to riding of the palm.
| 1132 | |
3. நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன் காமுற்றோர் ஏறும் மடல். | Once I was modest and manly My love has now Madal only.
| 1133 | |
4. காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு நல்லாண்மை என்னும் புணை. | Rushing flood of love sweeps away The raft of shame and firmness, aye!
| 1134 | |
5. தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு மாலை உழக்கும் துயர். | Palm-ride and pangs of eventide Are gifts of wreath-like bracelet maid.
| 1135 | |
6. மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற படல்ஒல்லா பேதைக்கென் கண். | Madal I ride at midnight for My eyes sleep not seeing this fair.
| 1136 | |
7. கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணின் பெருந்தக்கது இல். | Her sea-like lust seeks not Madal! Serene is woman's self control.
| 1137 | |
8. நிறையரியர் மன்அளியர் என்னாது காமம் மறையிறந்து மன்று படும். | Lust betrays itself in haste Though women are highly soft and chaste.
| 1138 | |
9. அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம் மறுகின் மறுகும் மருண்டு. | My perplexed love roves public street Believing that none knows its secret.
| 1139 | |
10. யாங்கண்ணின் காண நகுப அறிவில்லார் யாம்பட்ட தாம்படா வாறு. | Fools laugh at me before my eyes For they feel not my pangs and sighs.
| 1140 | |
* Palmyra horse or 'Madal' is a torture expressive of the burning passion of the lover to the beloved. The lover's body is laid on a rough pricking palmyra bed and he is carried along the street with songs of love pangs. The parents of the lovers first reproach them and then consent to their marriage. |
|