பக்கம் எண் :

235
115. அலரறிவுறுத்தல் - Public clamour
 

1. அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்.

Rumour sustains my existence
Good luck! many know not its sense.

1141
 

2. மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.

Rumour gives me the flower-like belle
People know not what rare angel.

1142
 

3. உறாஅதோ ஊரறிந்த கௌவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.

I profit by this public rumour
Having not, I feel, I have her.

1143
 

4. கவ்வையால் கவ்விது காமம் அதுஇன்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து.

Rumour inflames the love I seek
Or else it becomes bleak and weak.

1144
 

5. களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது.

Drink delights as liquor flows
Love delights as rumour grows.

1145
 

6. கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று.

One lasting day we met alone
Lasting rumours eclipse our moon.

1146
 

7. ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்.

Scandal manures; mother's refrain
Waters the growth of this love-pain.

1147
 

8. நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால்
காமம் நுதுப்பேம் எனல்.

To quench the lust by rumour free
Is to quench fire by pouring ghee.

1148
 

9. அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை.

Who said "fear not" flared up rumour
Why then should I blush this clamour?

1149
 

10. தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கௌவை எடுக்கும்இவ் வூர்.

Town raising this cry, I desire
Consent is easy from my sire.

1150