239 117. படர்மெலிந்திரங்கல் - Wailing of pining love | |
1. மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகும். | It swells out like baled out spring How to bear this pain so writhing?
| 1161 | |
2. கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு உரைத்தலும் நாணுத் தரும். | I can't conceal this nor complain For shame to him who caused this pain.
| 1162 | |
3. காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என் நோனா உடம்பி னகத்து. | In life - poles of this wearied frame Are poised the weights of lust and shame.
| 1163 | |
4. காமக் கடல்மன்னும் உண்டோ அதுநீந்தும் ஏமப் புணைமன்னும் இல். | My lust is a sea, I do not see A raft to go across safely.
| 1164 | |
5. துப்பின் எவனாவர் மற்கொல் துயர்வரவு நட்பினுள் ஆற்று பவர். | What wilt they prove when they are foes Who in friendship bring me woes!
| 1165 | |
6. இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால் துன்பம் அதனிற் பெரிது. | The pleasure in love is oceanful But its pangs are more painful.
| 1166 | |
7. காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன் யாமத்தும் யானே உளேன். | Wild waves of love I swim shoreless Pining alone in midnight hush.
| 1167 | |
8. மன்னுயி ரெல்லாம் துயிற்றி அளித்திரா என்னல்லது இல்லை துணை. | Night's mercy lulls all souls to sleep Keeping but me for companionship.
| 1168 | |
9. கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள் நெடிய கழியும் இரா. | Crueller than that cruel he Are midnight hours gliding slowly.
| 1169 | |
10. உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர் நீந்தல மன்னோஎன் கண். | Like heart, if my sight reaches him It won't in floods of tears swim!
| 1170 | |
|