247 121. நினைந்தவர் புலம்பல் - Sad memories | |
1. உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் கள்ளினும் காமம் இனிது. | Love is sweeter than wine; for vast Is its delight at very thought.
| 1201 | |
2. எனைத்தொன்று இனிதேகாண் காமம்தாம் வீழ்வார் நினைப்ப வருவதொன்று இல். | Pains are off at the lover's thought In all aspects this love is sweet.
| 1202 | |
3. நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல் சினைப்பது போன்று கெடும். | To sneeze I tried hence but could not Me he tried to think but did not.
| 1203 | |
4. யாமும் உளேம்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து ஓஒ உளரே அவர். | Have I a place within his heart? Ah from mine he will never depart.
| 1204 | |
5. தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல் எம்நெஞ்சத்து ஓவா வரல். | Shame! My heart often he enters Banning me entry into his.
| 1205 | |
6. மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடுயான் உற்றநாள் உள்ள உளேன். | Beyond the thought of life with him What else of life can I presume?
| 1206 | |
7. மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன் உள்ளினும் உள்ளம் சுடும். | What will happen if I forget When his memory burns my heart?
| 1207 | |
8. எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ காதலர் செய்யும் சிறப்பு. | I bring him to ceaseless memory He chides not; and thus honours me.
| 1208 | |
9. விளியும்என் இன்னுயிர் வேறல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைத்து. | Dear life ebbs away by thought Of him who said we are one heart.
| 1209 | |
10. விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப் படாஅதி வாழி மதி. | Hail moon! Set not so that I find Him who left me but not my mind.
| 1210 | |
|