பக்கம் எண் :

249
122. கனவுநிலை யுரைத்தல் - Dream visions
 

1. காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து.

How shall I feast this dream-vision
That brings the beloved's love-mission?

1211
 

2. கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன்.

I beg these fish-like dark eyes sleep
To tell my lover how life I keep.

1212
 

3. நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.

In wakeful hours who sees me not
I meet in dreams and linger yet.

1213
 

4. கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு.

In dreams I enjoy his love-bliss
Who in wakeful hours I miss.

1214
 

5. நனவினாற் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதெ இனிது.

Dream-sight of him delights at once
Awake- What of seeing him -hence.

1215
 

6. நனவென ஒன்றில்லை யாயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்.

If wakeful hours cometo nought
My lov'r in dreams would nev'r depart

1216
 

7. நனவினால் நல்காக் கொடியார் கனவினால்
என்எம்மைப் பீழிப் பது.

Awake he throws my overtures
Adream, ah cruel! he tortures!

1217
 

8. துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.

Asleep he embraces me fast;
Awake he enters quick my heart.

1218
 

9. நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர்.

In dreams who don't discern lovers
Rue their missing in wakeful hours.

1219
 

10. நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர்.

The townsmen say he left me thus
In dreams failing to see him close.

1220