5 2. வான் சிறப்பு. - The blessing of Rain | |
1. வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று | The genial rain ambrosia call: The world but lasts while rain shall fall.
| 11 | |
2. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை | The rain begets the food we eat And forms a food and drink concrete.
| 12 | |
3. விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி | Let clouds their visits stay, and dearth Distresses all the sea-girt earth.
| 13 | |
4. ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும் வாரி வளங்குன்றிக் கால் | Unless the fruitful shower descend, The ploughman's sacred toil must end.
| 14 | |
5. கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை | Destruction it may sometimes pour, But only rain can life restore.
| 15 | |
6. விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிது | No grassy blade its head will rear, If from the cloud no drop appear.
| 16 | |
7. நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின் | The ocean's wealth will waste away, Except the cloud its stores repay.
| 17 | |
8. சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு | The earth, beneath a barren sky, Would offerings for the gods deny.
| 18 | |
9. தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்கா தெனின். | Were heaven above to fail below Nor alms nor penance earth would show.
| 19 | |
10. நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு | Water is life that comes from rain Sans rain our duties go in vain.
| 20 | |
|