41 20. பயனில சொல்லாமை - Against vain speaking | |
1. பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும் | With silly words who insults all Is held in contempt as banal.
| 191 | |
2. பயனில பல்லார்முன் சொல்லல் நயனில நட்டார்கண் செய்தலின் தீது | Vain talk before many is worse Than doing to friends deeds adverse.
| 192 | |
3. நயனிலன் என்பது சொல்லும் பயனில பாரித் துரைக்கும் உரை | The babbler's hasty lips proclaim That "good-for-nothing" is his name.
| 193 | |
4. நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் பண்பில்சொல் பல்லா ரகத்து | Vain words before an assembly Will make all gains and goodness flee.
| 194 | |
5. சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில நீர்மை யுடையார் சொலின் | Glory and grace will go away When savants silly nonsense say.
| 195 | |
6. பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல் மக்கட் பதடி யெனல் | Call him a human chaff who prides Himself in weightless idle words.
| 196 | |
7. நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர் பயனில சொல்லாமை நன்று | Let not men of worth vainly quack Even if they would roughly speak.
| 197 | |
8. அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல் | The wise who weigh the worth refrain From words that have no grain and brain.
| 198 | |
9. பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த மாசறு காட்சி யவர் | The wise of spotless self-vision Slip not to silly words-mention.
| 199 | |
10. சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல் | To purpose speak the fruitful word And never indulge in useless load.
| 200 | |
|