43 21. தீவினையச்சம் - Fear of sin | |
1. தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை என்னுஞ் செருக்கு | Sinners fear not the pride of sin. The worthy dread the ill within.
| 201 | |
2. தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும் | Since evil begets evil dire Fear ye evil more than fire.
| 202 | |
3. அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய செறுவார்க்கும் செய்யா விடல் | The wisest of the wise are those Who injure not even their foes.
| 203 | |
4. மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு | His ruin virtue plots who plans The ruin of another man's.
| 204 | |
5. இலன்என்று தீயவை செய்யற்க செய்யின் இலனாகும் மற்றும் பெயர்த்து | Who makes poverty plea for ill Shall reduce himself poorer still.
| 205 | |
6. தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால தன்னை அடல்வேண்டா தான் | From wounding others let him refrain Who would from harm himself remain.
| 206 | |
7. எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை வீயாது பின்சென்று அடும் | Men may escape other foes and live But sin its deadly blow will give.
| 207 | |
8. தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயாது அடிஉரைந் தற்று | Ruin follows who evil do As shadow follows as they go.
| 208 | |
9. தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும் துன்னற்க தீவினைப் பால் | Let none who loves himself at all Think of evil however small.
| 209 | |
10. அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித் தீவினை செய்யான் எனின் | He is secure, know ye, from ills Who slips not right path to do evils.
| 210 | |
|