57 28. கூடாவொழுக்கம் - Imposture | |
1. வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும். | Elements five of feigned life Of a sly hypocrite within laugh.
| 271 | |
2. வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம் தான்அறி குற்றப் படின் | Of what avail are sky-high shows When guild the conscience gnaws and knows.
| 272 | |
3. வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று. | Vaunting sainthood while weak within Seems a grazer with tiger skin.
| 273 | |
4. தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று. | Sinning in saintly show is like Fowlers in ambush birds to strike.
| 274 | |
5. பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று ஏதம் பலவுந் தரும். | Who false within but freedom feign Shall moan "What have we done" with pain.
| 275 | |
6. நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணார் இல் | Vilest is he who seems a saint Cheating the world without restraint.
| 276 | |
7. புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி மூக்கிற் கரியார் உடைத்து | Berry-red is his outward view, Black like its nose his inward hue.
| 277 | |
8. மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி மறைந்தொழுகும் மாந்தர் பலர். | Filthy in mind some bathe in streams Hiding sins in showy extremes.
| 278 | |
9. கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன வினைபடு பாலால் கொளல். | Know men by acts and not by forms Strait arrow kills, bent lute but charms.
| 279 | |
10. மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின். | No balding nor tangling the hair! Abstain from condemned acts with care.
| 280 | |
|