1. வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல் | If "What is truth"? the question be, It is to speak out evil-free.
| 291 | |
2. பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின். | E'en falsehood may for truth suffice, When good it brings removing vice.
| 292 | |
3. தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும். | Let not a man knowingly lie; Conscience will scorch and make him sigh.
| 293 | |
4. உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்து ளெல்லாம் உளன். | He lives in loving hearts of all Who serves the Truth serene in soul.
| 294 | |
5. மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானஞ்செய் வாரின் தலை. | To speak the truth from heart sincere Is more than giving and living austere.
| 295 | |
6. பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை எல்லா அறமும் தரும். | Not to lie brings all the praise All virtues from Truth arise.
| 296 | |
7. பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று. | Lie not lie not. Naught else you need All virtues are in Truth indeed.
| 297 | |
8. புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும். | Water makes you pure outward Truth renders you pure inward.
| 298 | |
9. எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு. | All lights are not lights for the wise; Truth light is light bright like sun-light
| 299 | |
10. யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற. | Of all the things we here have seen Nothing surpasses Truth serene ! | 300 | |
|