65 32. இன்னா செய்யாமை - non-violence | |
1. சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா செய்யாமை மாசற்றார் கோள் | The pure by faith mean pain to none Though princely wealth by that is won.
| 311 | |
2. கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்துஇன்னா செய்யாமை மாசற்றார் கோள். | The spotless hearts seek not revenge Though Malice does the worst in rage.
| 312 | |
3. செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் உய்யா விழுமம் தரும். | Revenging even causeless hate Bad-blood breeds and baneful heat.
| 313 | |
4. இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல். | Doing good-turns, put them to shame Thus chide the evil who do harm.
| 314 | |
5. அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தந்நோய்போல் போற்றாக் கடை. | What does a man from wisdom gain If he pines not at other's pain?
| 315 | |
6. இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கண் செயல். | What you feel as 'pain' to yourself Do it not to the other-self
| 316 | |
7. எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் மாணாசெய் யாமை தலை. | Any, anywhere injure not At any time even in thought.
| 317 | |
8. தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ மன்னுயிர்க்கு இன்னா செயல். | How can he injure other souls Who in his life injury feels.
| 318 | |
9. பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும். | Harm others in the forenoon Harm seeks thee in afternoon.
| 319 | |
10. நோய்எல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர். | No harm is done by peace-lovers For pains rebound on pain-givers.
| 320 | |
|