67 33. கொல்லாமை - Non-killing | |
1. அறவினை யாதெனில் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாம் தரும் | What is Virtue? 'Tis not to kill For killing causes every ill.
| 321 | |
2. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. | Share the food and serve all lives This is the law of all the laws.
| 322 | |
3. ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றுஅதன் பின்சாரப் பொய்யாமை நன்று. | Not to kill is unique good The next, not to utter falsehood.
| 323 | |
4. நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறி. | What way is good? That we can say The way away from heat to slay.
| 324 | |
5. நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை | Of saints who renounce birth-fearing The head is he who dreads killing.
| 325 | |
6. கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல் செல்லாது உயிருண்ணுங் கூற்று. | Life-eating-Death shall spare the breath Of him who no life puts to death.
| 326 | |
7. தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது இன்னுயிர் நீக்கும் வினை. | Kill not life that others cherish Even when your life must perish.
| 327 | |
8. நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக் கொன்றாகும் ஆக்கம் கடை. | The gain of slaughter is a vice Though deemed good in sacrifice.
| 328 | |
9. கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர் புன்மை தெரிவா ரகத்து. | Those who live by slaying are Eaters of carrion bizarre!
| 329 | |
10. உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின் செல்லாத்தீ வாழ்க்கை யவர் | The loathsome poor sickly and sore Are killers stained by blood before | 330 | |
|