பக்கம் எண் :

75
37. அவா அறுத்தல் - Curbing of desire
 

1. அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து.

Desire to all, always is seed
From which ceaseless births proceed.

361
 

2. வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.

If long thou must, long for non-birth
It comes by longing no more for earth.

362
 

3. வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
யாண்டும் அஃதொப்பது இல்.

No such wealth is here and there
As peerless wealth of non-desire.

363
 

4. தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்

To nothing crave is purity
That is the fruit of verity.

364
 

5. அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர்

The free are those who desire not
The rest not free in bonds are caught.

365
 

6. அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா

Dread desire; Virtue is there
To every soul desire is snare!

366
 

7. அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்

Destroy desire; deliverance
Comes as much as you aspire hence.

367
 

8. அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.

Desire extinct no sorrow-taints
Grief comes on grief where it pretends.

368
 

9. இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்.

Desire, the woe of woes destroy
Joy of joys here you enjoy.

369
 

10. ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.

Off with desire insatiate
You gain the native blissful state.

370