பக்கம் எண் :

83
40. கல்வி - Education
 

1. கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

Lore worth learning, learn flawlessly
Live by that learning thoroughly.

391
 

2. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

Letter, number, art and science
Of living kind both are the eyes.

392
 

3. கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.

The learned alone have eyes on face
The ignorant two sores of disgrace.

393
 

4. உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்

To meet with joy and part with thought
Of learned men this is the art.

394
 

5. உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்

Like poor before rich they yearn:
For knowledge: the low never learn.

395
 

6. தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.

As deep you dig the sand spring flows
As deep you learn the knowledge grows.

396
 

7. யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.

All lands and towns are learner's own
Why not till death learning go on!

397
 

8. ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து

The joy of learning in one birth
Exalts man upto his seventh.

398
 

9. தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.

The learned foster learning more
On seeing the world enjoy their lore.

399
 

10. கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை.

Learning is wealth none could destroy
Nothing else gives genuine joy.

400