91 44. குற்றங்கடிதல் - Avoiding faults | |
1. செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து. | Plenty is their prosperity Who're free from wrath pride lust petty.
| 431 | |
2. இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா உவகையும் ஏதம் இறைக்கு. | Mean pride, low pleasure, avarice These add blemishes to a prince.
| 432 | |
3. தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார். | Though millet-small their faults might seem Men fearing disgrace, Palm-tall deem.
| 433 | |
4. குற்றமே காக்க பொருளாகக் குற்றமே அற்றம் தரூஉம் பகை. | Watch like treasure freedom from fault Our fatal foe is that default.
| 434 | |
5. வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும். | Who fails to guard himself from flaw Loses his life like flame-lit straw.
| 435 | |
6. தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்பிற்பின் என்குற்ற மாகும் இறைக்கு | What fault can be the king's who cures First his faults, then scans others.
| 436 | |
7. செயற்பால செய்யா திவறியான் செல்வம் உயற்பால தன்றிக் கெடும். | That miser's wealth shall waste and end Who would not for a good cause spend.
| 437 | |
8. பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் எண்ணப் படுவதொன் றன்று. | The gripping greed of miser's heart Is more than fault the worst apart.
| 438 | |
9. வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க நன்றி பயவா வினை. | Never boast yourself in any mood Nor do a deed that does no good.
| 439 | |
10. காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் ஏதில ஏதிலார் நூல். | All designs of the foes shall fail If one his wishes guards in veil.
| 440 | |
|