93 45. பெரியாரைத் துணைக்கோடல் - Gaining great men's help | |
1. அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல். | Weigh their worth and friendship gain Of men of virtue and mature brain.
| 441 | |
2. உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல். | Cherish the help of men of skill Who ward and safe-guard you from ill.
| 442 | |
3. அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல். | Honour and have the great your own Is rarest of the rare things known.
| 443 | |
4. தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையு ளெல்லாந் தலை. | To have betters as intimates Power of all powers promotes.
| 444 | |
5. சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல். | Ministers are the monarch's eyes Round him should be the right and wise.
| 445 | |
6. தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்த தில். | To move with worthy friends who knows Has none to fear from frightful foes.
| 446 | |
7. இடிக்குந் துணையாரை ஆள்வாரை யாரே கெடுக்குந் தகைமை யவர் | No foe can foil his powers whose friends reprove him when he errs.
| 447 | |
8. இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும். | The careless king whom none reproves Ruins himself sans harmful foes.
| 448 | |
9. முதலிலார்க்கு ஊதியம் இல்லை மதலையாஞ் சார்பிலார்க்கு இல்லை நிலை. | No capital, no gain in trade No prop secure sans good comrade.
| 449 | |
10. பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல். | To give up good friends is ten times worse Than being hated by countless foes.
| 450 | |
|