95 46. சிற்றினஞ் சேராமை - Avoiding mean company | |
1. சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும். | The ignoble the noble fear The mean hold them as kinsmen dear.
| 451 | |
2. நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்ப தாகும் அறிவு. | With soil changes water's taste With mates changes the mental state.
| 452 | |
3. மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம் இன்னான் எனப்படுஞ் சொல். | Wisdom depends upon the mind The worth of man upon his friend.
| 453 | |
4. மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு இனத்துள தாகும் அறிவு. | Wisdom seems to come from mind But it truly flows from the kind.
| 454 | |
5. மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனம்தூய்மை தூவா வரும். | Purity of the thought and deed Comes from good company indeed.
| 455 | |
6. மனம்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனம்தூயார்க்கு இல்லைநன் றாகா வினை. | Pure-hearted get good progeny Pure friendship acts with victory.
| 456 | |
7. மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம் எல்லாப் புகழும் தரும். | Goodness of mind increases gain Good friendship fosters fame again.
| 457 | |
8. மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு இனநலம் ஏமாப் புடைத்து. | Men of wisdom, though good in mind In friends of worth a new strength find.
| 458 | |
9. மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும் இனநலத்தின் ஏமாப் புடைத்து. | Good mind decides the future bliss Good company gains strength to this.
| 459 | |
10. நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின் அல்லற் படுப்பதூஉம் இல். | No help good company exeeds; The bad to untold anguish leads.
| 460 | |
|