பக்கம் எண் :

103
50. இடனறிதல் - Judging the place
 

1. தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது

No action take, no foe despise
Until you have surveyed the place.

491
 

2. முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும்

Many are gains of fortresses
Ev'n to kings of power and prowess.

492
 

3. ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்.

Weaklings too withstand foe's offence
In proper fields of strong defence.

493
 

4. எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்

If fighters fight in vantage field
The plans of foes shall be baffled.

494
 

5. நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற.

In water crocodile prevails
In land before others it fails.

495
 

6. கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து

Sea-going ship goes not on shore
Nor on sea the strong-wheeled car.

496
 

7. அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின்

No aid but daring dash they need
When field is chosen right for deed.

497
 

8. சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்

Though force is small, if place is right
One quells a foe of well-armed might.

498
 

9. சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது

To face a foe at home is vain
Though fort and status are not fine.

499
 

10. காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேளாள் முகத்த களிறு.

A fox can kill a war tusker
Fearless with feet in deep quagmire.

500