117 57. வெருவந்த செய்யாமை - Avoiding terrorism | |
1. தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து. | A king enquires and gives sentence Just to prevent future offence.
| 561 | |
2. கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம் நீங்காமை வேண்டு பவர். | Wield fast the rod but gently lay This strict mildness prolongs the sway.
| 562 | |
3. வெருவந்த செய்துஒழுகும் வெங்கோல னாயின் ஒருவந்தம் ஒல்லைக் கெடும். | His cruel rod of dreadful deed Brings king's ruin quick indeed.
| 563 | |
4. இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன் உறைகடுகி ஒல்லைக் கெடும். | As men the king a tyrant call His days dwindled, hasten his fall.
| 564 | |
5. அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம் பேஎய்கண் டன்னது உடைத்து. | Whose sight is scarce, whose face is foul His wealth seems watched by a ghoul.
| 565 | |
6. கடுஞ்சொல்லன் கண்ணில னாயின் நெடுஞ்செல்வம் நீடின்றி ஆங்கே கெடும். | Whose word is harsh, whose sight is rude His wealth and power quickly fade.
| 566 | |
7. கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன் அடுமுரண் தேய்க்கும் அரம். | Reproofs rough and punishments rude Like files conquering power corrode.
| 567 | |
8. இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச் சீறின் சிறுகும் திரு | The king who would not take counsels Rages with wrath-his fortune fails.
| 568 | |
9. செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன் வெருவந்து வெய்து கெடும். | The king who builds not fort betimes Fears his foes in wars and dies.
| 569 | |
10. கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது இல்லை நிலக்குப் பொறை. | The crushing burden borne by earth Is tyrants bound to fools uncouth.
| 570 | |
|