13 6. வாழ்க்கைத் துணைநலம் - The worth of a wife | |
1. மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை | A good housewife befits the house, Spending with thrift the mate's resource.
| 51 | |
2. மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல் | Bright is home when wife is chaste. If not all greatness is but waste.
| 52 | |
3. இல்லதென் இல்லவள் மாண்பானால்; உள்ளதென் இல்லவள் மாணாக் கடை | What is rare when wife is good. What can be there when she is bad?
| 53 | |
4. பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மையுண் டாகப் பெறின் | What greater fortune is for men Than a constant chaste woman?
| 54 | |
5. தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை | Her spouse before God who adores, Is like rain that at request pours.
| 55 | |
6. தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தசைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண் | The good wife guards herself from blame, She tends her spouse and brings him fame.
| 56 | |
7. சிறைகாக்குங் காப்புஎவன் செய்யும் மகளிர் நிறைகாக்குங் காப்பே தலை | Of what avail are watch and ward? Their purity is women's guard.
| 57 | |
8. பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு | Women who win their husbands' heart Shall flourish where the gods resort.
| 58 | |
9. புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வவார்முன் ஏறுபோல் பீடு நடை | A cuckold has not the lion-like gait Before his detractors aright.
| 59 | |
10. மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன் நன்கலம் நன்மக்கட் பேறு | An honest wife is home's delight And children good are jewels abright.
| 60 | |
|