19 9. விருந்தோம்பல் - Hospitality | |
1. இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு | Men set up home, toil and earn To tend the guests and do good turn.
| 81 | |
2. விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று | To keep out guests cannot be good Albeit you eat nectar-like food.
| 82 | |
3. வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று | Who tends his guests day in and out His life in want never wears out.
| 83 | |
4. அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல். | The goddess of wealth will gladly rest Where smiles welcome the worthy guest.
| 84 | |
5. வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம். | Should his field be sown who first Feeds the guests and eats the rest?
| 85 | |
6. செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு | Who tends a guest and looks for next Is a welcome guest in heaven's feast.
| 86 | |
7. இனைத்துணைத் தென்பதொன் றில்லை: விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன் | Worth of the guest of quality Is worth of hospitality.
| 87 | |
8. பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார் | Who loathe guest-service one day cry: "We toil and store; but life is dry".
| 88 | |
9. உடமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை மடவார்கண் உண்டு | The man of wealth is poor indeed Whose folly fails the guest to feed.
| 89 | |
10. மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து | Anicham smelt withers: like that A wry-faced look withers the guest.
| 90 | |
|