பக்கம் எண் :

அரசியல்78கலைஞர் உரை

386.

காட்சி கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்

மீக்கூறும் மன்னன் நிலம்.

 

காட்சிக்கு  எளிமையும்,  கடுஞ்சொல் கூறாத இனிய பண்பாடும் உடைய
அரசைத்தான் உலகம் புகழும்.
 

387.

இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால்

தான்கண் டனைத்திவ் வுலகு.

 

வாக்கில் இனிமையும்,   பிறர்க்கு  வழங்கிக்   காத்திடும்   தன்மையும்
கொண்டவர்க்கு இவ்வையகமே வசப்படும்.
 

388.

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்

கிறையென்று வைக்கப் படும்.

 

நீதிநெறியுடன் அரசு நடத்தி, மக்களைக் காப்பாற்றும் ஆட்சியாளன்தான்
மக்களுக்குத் தலைவன் எனப் போற்றப் படுவான்.
 

389.

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்

கவிகைக்கீழ்த் தங்கு முலகு.

 

காதைக்   குடையக்கூடிய  கடுஞ்சொற்களையும்  பொறுத்துக் கொள்கிற
பண்பாளரின் அரசுக்குத்தான் மக்களிடம் மதிப்பு இருக்கும்.
 

390.

கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்

உடையானாம் வேந்தர்க் கொளி.

 

நலவாழ்வுக்கு  வேண்டியவற்றை  வழங்கியும், நிலை யுணர்ந்து கருணை
காட்டியும், நடுநிலை தவறாமல்  ஆட்சி  நடத்தியும்,  மக்களைப்  பேணிக்
காப்பதே ஓர் அரசுக்குப் புகழொளி சேர்ப்பதாகும்.