பக்கம் எண் :

அரசியல்80கலைஞர் உரை

396.

தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு.

 

தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப்
படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும்.
 

397.

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்

சாந்துணையுங் கல்லாத வாறு.

 

கற்றோர்க்கு   எல்லா   நாடுகளிலும்  எல்லா  ஊர்களிலும்    சிறப்பு
என்கிறபோது,   ஒருவன்  சாகும்  வரையில்  கற்காமல்  காலம்  கழிப்பது
ஏனோ?
 

398.

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்

கெழுமையும் ஏமாப் புடைத்து.

 

ஒரு   தலைமுறையில்   பெறும்    கல்வி    அறிவனாது,    ஏழேழு
தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும்.
 

399.

தாமின் புறுவ துலகின் புறக்கண்டு

காமுறுவர் கற்றறிந் தார்.

 

தமக்கு  இன்பம்  தருகின்ற   கல்வியறிவு   உலகத்தாருக்கும்  இன்பம்
தருவதைக்   கண்டு, அறிஞர்கள் மேலும் மேலும்   பலவற்றைக்    கற்றிட
விரும்புவார்கள்.
 

400.

கேடில் விழுச்செல்வங் கல்வி யொருவற்கு

மாடல்ல மற்றை யவை.

 

கல்வி   ஒன்றே   அழிவற்ற   செல்வமாகும். அதற்கொப்பான  சிறந்த
செல்வம் வேறு எதுவும் இல்லை.