42. கேள்வி |
411. | செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ் |
| செல்வத்து ளெல்லாந் தலை. |
|
செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும். |
412. | செவிக்குண வில்லாத போழ்து சிறிது |
| வயிற்றுக்கும் ஈயப் படும். |
|
செவி வழியாக இன்பம் தரும் உணவு இல்லாதபோதே சிறிதளவு உணவு வயிற்றுக்குத் தரும் நிலை ஏற்படும். |
413. | செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின் |
| ஆன்றாரோ டொப்பர் நிலத்து. |
|
குறைந்த உணவருந்தி நிறைந்த அறிவுடன் விளங்கும் ஆன்றோர்க்கு ஒப்பாகக் கேள்வி ஞானம் எனும் செவியுணவு அருந்துவோர் எண்ணப்படுவர். |
414. | கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற் |
| கொற்கத்தின் ஊற்றாந் துணை. |
|
நூல்களைக் கற்காவிட்டாலும், கற்றவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டால், அது நடை தளர்ந்தவனுக்கு உதவிடும் ஊன்றுகோலைப் போலத் துணையாக அமையும். |
415. | இழுக்க லுடையுழி ஊற்றுக்கோ லற்றே |
| ஒழுக்க முடையார்வாய்ச் சொல். |
|
வழுக்கு நிலத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவது போல் ஒழுக்கம் உடையவர்களின் அறிவுரையானது உதவும். |