426. | எவ்வ துறைவ துலக முலகத்தோ |
| டவ்வ துறைவ தறிவு. |
|
உயர்ந்தோர் வழியில் உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ அதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவாகும். |
427. | அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார் |
| அஃதறி கல்லா தவர். |
|
ஒரு விளைவுக்கு எதிர்விளைவு எப்படியிருக்குமென அறிவுடையவர்கள்தான் சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள் சிந்திக்க மாட்டார்கள். |
428. | அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ |
| தஞ்சல் அறிவார் தொழில் |
|
அறிவில்லாதவர்கள்தாம் அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச மாட்டார்கள். அறிஞர்கள் மட்டுமே அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவார்கள். |
429. | எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை |
| அதிர வருவதோர் நோய். |
|
வருமுன் அறிந்து காத்துக்கொள்ளும் திறனுடையவர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய துன்பம் ஏற்படாது. |
430. | அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார் |
| என்னுடைய ரேனு மிலர். |
|
அறிவு இல்லாதவர்களுக்கு வேறு எது இருந்தாலும் பெருமையில்லை; அறிவு உள்ளவர்களுக்கு வேறு எது இல்லாவிட்டாலும் சிறுமை இல்லை. |