436. | தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின் |
| என்குற்ற மாகும் இறைக்கு. |
|
முதலில் தனக்குள்ள குறையை நீக்கிக் கொண்டு அதன் பின்னர் பிறர் குறையைக் கண்டு சொல்லும் தலைவனுக்கு என்ன குறை நேரும்? |
437. | செயற்பால செய்யா திவறியான் செல்வம் |
| உயற்பால தன்றிக் கெடும். |
|
நற்பணிகளைச் செய்யாமல் சேமித்து வைக்கப்படும் கருமியின் செல்வம் பயன் ஏதுமின்றிப் பாழாகிவிடும். |
438. | பற்றுள்ள மென்னும் இவறன்மை எற்றுள்ளும் |
| எண்ணப் படுவதொன் றன்று. |
|
எல்லாக் குற்றங்களையும்விடத் தனிப்பெருங் குற்றமாகக் கருதப்படுவது பொருள் சேர்ப்பதில் பற்றுக்கொண்டு எவருக்கும் எதுவும் ஈயாமல் வாழ்வதுதான். |
439. | வியவற்க எஞ்ஞான்றுந் தன்னை நயவற்க |
| நன்றி பயவா வினை. |
|
எந்தவொரு காலகட்டத்திலும் தன்னைத்தானே உயர்வாக எண்ணிடும் தற்பெருமைகொண்டு நன்மை தராத செயல்களில் ஈடுபடக் கூடாது. |
440. | காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் |
| ஏதில ஏதிலார் நூல். |
|
தமது விருப்பத்தைப் பகைவர் அறிந்து கொள்ள முடியாமல் நிறைவேற்றுபவரிடம் அந்தப் பகைவரின் எண்ணம் பலிக்காமற் போய்விடும். |