45. பெரியாரைத் துணைக்கோடல் |
441. | அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை |
| திறனறிந்து தேர்ந்து கொளல். |
|
அறமுணர்ந்த மூதறிஞர்களின் நட்பைப் பெறும் வகை அறிந்து, அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். |
442. | உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் |
| பெற்றியார்ப் பேணிக் கொளல். |
|
வந்துள்ள துன்பத்தைப் போக்கி, மேலும் துன்பம் நேராமல் காக்கவல்ல பெரியோர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும். |
443. | அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப் |
| பேணித் தமராக் கொளல். |
|
பெரியவர்களைப் போற்றிப் பாராட்டி அவர்களுடன் உறவாடுதல் எல்லாப் பேறுகளையும் விடப் பெரும் பேறாகும். |
444. | தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் |
| வன்மையு ளெல்லாந் தலை. |
|
அறிவு ஆற்றல் ஆகியவற்றில் தம்மைக் காட்டிலும் சிறந்த பெரியவராய் இருப்பவரோடு உறவுகொண்டு அவர்வழி நடப்பது மிகப்பெரும் வலிமையாக அமையும். |
445. | சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன் |
| சூழ்வாரைச் சூழ்ந்து கொளல். |
|
கண்ணாக இருந்து எதனையும் கண்டறிந்து கூறும் அறிஞர் பெருமக்களைச் சூழ வைத்துக் கொண்டிருப்பதே ஆட்சியாளர்க்கு நன்மை பயக்கும். |