456. | மனந்தூயார்க் கெச்சநன் றாகும் இனந்தூயார்க் |
| கில்லைநன் றாகா வினை. |
|
மனத்தின் தூய்மையால் புகழும், சேர்ந்த இனத்தின் தூய்மையால் நற்செயல்களும் விளையும். |
457. | மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம் |
| எல்லாப் புகழுந் தரும். |
|
மனத்தின் நலம் உயிருக்கு ஆக்கமாக விளங்கும். இனத்தின் நலமோ எல்லாப் புகழையும் வழங்கும். |
458. | மனநலம் நன்குடைய ராயினுஞ் சான்றோர்க் |
| கினநலம் ஏமாப் புடைத்து. |
|
மனவளம் மிக்க சான்றோராக இருப்பினும் அவர் சேர்ந்துள்ள கூட்டத்தினரைப் பொறுத்தே வலிமை வந்து வாய்க்கும். |
459. | மனநலத்தி னாகும் மறுமைமற் றஃதும் |
| இனநலத்தி னேமாப் புடைத்து. |
|
நல்ல உறுதியான உள்ளம் படைத்த உயர்ந்தோராக இருந்தாலும் அவர் சார்ந்த இனத்தின் உறுதியும் அவருக்கு வலிமையான துணையாக அமையக் கூடியதாகும். |
460. | நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின் |
| அல்லற் படுப்பதூஉ மில். |
|
நல்ல இனத்தைக் காட்டிலும் துணையாக இருப்பதும், தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தரக்கூடியதும் எதுவுமே இல்லை. |