496. | கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் |
| நாவாயும் ஓடா நிலத்து. |
|
ஒரு செயலுக்குரிய இடத்தைத் தேர்ந்தெடுப்பவர் 'தேர் கடலிலே ஓடாது' 'கப்பல் நிலத்தில் போகாது' என்பதையாவது தெரிந்தவராக இருக்க வேண்டும். |
497. | அஞ்சாமை யல்லால் துணைவேண்டா எஞ்சாமை |
| எண்ணி யிடத்தாற் செயின். |
|
ஒரு செயலுக்குரிய வழி முறைகளைக் குறையின்றிச் சிந்தித்துச் செய்யுமிடத்து, அஞ்சாமை ஒன்றைத் தவிர, வேறு துணை தேவையில்லை. |
498. | சிறுபடையான் செல்லிடஞ் சேரின் உறுபடையான் |
| ஊக்கம் அழிந்து விடும். |
|
சிறிய படை என்றாலும் அது தனக்குரிய இடத்தில் இருந்து போரிட்டால் பெரிய படையை வென்று விட முடியும். |
499. | சிறைநலனுஞ் சீரும் இலரெனினும் மாந்தர் |
| உறைநிலத்தோ டொட்ட லரிது. |
|
பாதுகாப்புக்கான கோட்டையும், மற்றும் பல படைச் சிறப்புகளும் இல்லாதிருப்பினும், அப்பகைவர் வாழும் நிலையான இடத்திற்குப் படையெடுத்துச் சென்று தாக்குவது எளிதான செயல் அல்ல. |
500. | காலாழ் களரின் நரியடுங் கண்ணஞ்சா |
| வேலாள் முகத்த களிறு. |
|
வேலேந்திய வீரர்களை வீழ்த்துகின்ற ஆற்றல் படைத்த யானை, சேற்றில் சிக்கி விட்டால் அதனை நரிகள் கூடக் கொன்று விடும். |