516. | செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ |
| டெய்த உணர்ந்து செயல். |
|
செயலாற்ற வல்லவனைத் தேர்ந்து, செய்யப்பட வேண்டிய செயலையும் ஆராய்ந்து, காலமுணர்ந்து அதனைச் செயல்படுத்த வேண்டும். |
517. | இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந் |
| ததனை அவன்கண் விடல். |
|
ஒரு காரியத்தை ஒருவர் எப்படிச் செய்து முடிப்பார் என்பதை ஆராய்ந்து பார்த்து, அதற்குப் பிறகு அந்தக் காரியத்தை அவரிடம் ஒப்படைக்க வேண்டும். |
518. | வினைக்குரிமை நாடிய பின்றை அவனை |
| அதற்குரிய னாகச் செயல். |
|
ஒரு செயலில் ஈடுபடுவதற்கு ஏற்றவனா என்பதை ஆராய்ந்து அறிந்த பிறகே, அவனை அந்தச் செயலில் ஈடுபடுத்த வேண்டும். |
519. | வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக |
| நினைப்பானை நீங்குந் திரு. |
|
எடுத்த காரியத்தை முடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பவரின் உறவைத் தவறாக எண்ணுபவரை விட்டுப் பெருமை அகன்று விடும். |
520. | நாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான் |
| கோடாமை கோடா துலகு. |
|
உழைப்போர் உள்ளம் வாடாமல் இருக்கும் வரையில் உலகின் செழிப்பும் வாடாமல் இருக்கும். எனவே உழைப்போர் நிலையை ஒவ்வொரு நாளும் அரசினர் ஆய்ந்தறிந்து ஆவன செய்ய வேண்டும். |