536. | இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை |
| வாயின் அதுவொப்ப தில். |
|
ஒருவரிடம், மறவாமை என்னும் பண்பு தவறாமல் பொருந்தி யிருக்குமேயானால், அதைவிட அவருக்கு நன்மை தரக்கூடியது வேறு எதுவும் இருக்க முடியாது. |
537. | அரியவென் றாகாத இல்லைபொச் சாவாக் |
| கருவியாற் போற்றிச் செயின். |
|
மறதியில்லாமலும், அக்கறையுடனும் செயல்பட்டால், முடியாதது என்று எதுவுமே இல்லை. |
538. | புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டுஞ் செய்யா |
| திகழ்ந்தார்க் கெழுமையும் இல். |
|
புகழுக்குரிய கடமைகளைப் போற்றிச் செய்திடல் வேண்டும். அப்படிச் செய்யாமல் புறக்கணிப்பவர்களுக்கு வாழ்க்கையில் உயர்வே இல்லை. |
539. | இகழ்ச்சியிற் கெட்டாரை உள்ளுக தாந்தம் |
| மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து. |
|
மமதையால் பூரித்துப்போய்க் கடமைகளை மறந்திருப்பவர்கள், அப்படி மறந்துபோய் அழிந்து போனவர்களை நினைத்துப் பார்த்துத் திருந்திக் கொள்ள வேண்டும். |
540. | உள்ளிய தெய்தல் எளிதுமன் மற்றுந்தான் |
| உள்ளிய துள்ளப் பெறின். |
|
கொண்ட குறிக்கோளில் ஊக்கத்துடன் இருந்து அதில் வெற்றி காண்பதிலேயே நாட்டமுடையவர்களுக்கு அந்தக் குறிக்கோளை அடைவது எளிதானதாகும். |