56. கொடுங்கோன்மை |
551. | கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண் |
| டல்லவை செய்தொழுகும் வேந்து. |
|
அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு, கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக் கொடியதாகும். |
552. | வேலோடு நின்றான் இடுவென் றதுபோலும் |
| கோலொடு நின்றான் இரவு. |
|
ஆட்சிக்கோல் ஏந்தியிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பது, வேல் ஏந்திய கொள்ளைக்காரனின் மிரட்டலைப் போன்றது. |
553. | நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் |
| நாடொறும் நாடு கெடும். |
|
ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள் தோறும் ஆராய்ந்து அவற்றிற்குத் தக்கவாறு நடந்து கொள்ளாத அரசு அமைந்த நாடு சீர்குலைந்து போய்விடும். |
554. | கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் |
| சூழாது செய்யும் அரசு. |
|
நாட்டுநிலை ஆராயாமல் கொடுங்கோல் புரியும் அரசு நிதி ஆதாரத்தையும் மக்களின் மதிப்பையும் இழந்துவிடும். |
555. | அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே |
| செல்வத்தைத் தேய்க்கும் படை. |
|
கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும். |