556. | மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல் |
| மன்னாவாம் மன்னர்க் கொளி. |
|
நீதிநெறி தவறாத செங்கோன்மைதான் ஓர் அரசுக்குப் புகழைத் தரும். இல்லையேல் அந்த அரசின் புகழ் நிலையற்றுச் சரிந்து போகும். |
557. | துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்தன் |
| அளியின்மை வாழும் உயிர்க்கு. |
|
மழையில்லாவிடில் துன்பமுறும் உலகத்தைப் போல் அருள் இல்லாத அரசினால் குடிமக்கள் தொல்லைப் படுவார்கள். |
558. | இன்மையின் இன்னா துடைமை முறைசெய்யா |
| மன்னவன் கோற்கீழ்ப் படின். |
|
வறுமையின்றி வாழ்ந்தால்கூட அந்த வாழ்க்கை கொடுங்கோல் ஆட்சியின் கீழ் அமைந்துவிட்டால் வறுமைத் துன்பத்தை விட அதிகத் துன்பம் தரக்கூடியது. |
559. | முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி |
| ஒல்லாது வானம் பெயல். |
|
முறை தவறிச் செயல்படும் ஆட்சியில் நீரைத் தேக்கிப் பயனளிக்கும் இடங்கள் பாழ்பட்டுப் போகுமாதலால், வான் வழங்கும் மழையைத் தேக்கி வைத்து வளம் பெறவும் இயலாது. |
560. | ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் |
| காவலன் காவான் எனின். |
|
ஓர் அரசு நாட்டை முறைப்படி காக்கத் தவறினால் ஆக்கப்பணிகள் எதுவும் நடக்காது; முக்கியமான தொழில்களும் தேய்ந்து விடும். |