58. கண்ணோட்டம் |
571. | கண்ணோட்டம் என்னுங் கழிபெருங் காரிகை |
| உண்மையான் உண்டிவ் வுலகு. |
|
இந்த உலகம், அன்பும் இரக்கமும் இணைந்த கண்ணோட்டம் எனப்படுகிற பெரும் அழகைக் கொண்டவர்கள் இருப்பதால்தான் பெருமை அடைகிறது. |
572. | கண்ணோட்டத் துள்ள துலகியல் அஃதிலார் |
| உண்மை நிலக்குப் பொறை. |
|
அன்புடன் அரவணைத்து இரக்கம் காட்டும் கண்ணோட்டம் எனப்படும் உலகியலுக்கு, மாறாக இருப்பவர்கள் இந்தப் பூமிக்குச் சுமையாவார்கள். |
573. | பண்ணென்னாம் பாடற் கியைபின்றேற் கண்ணென்னாங் |
| கண்ணோட்டம் இல்லாத கண். |
|
இரக்க உணர்வு, அன்பு எனும் கண்ணோட்டத்துடன் பொருந்தி வராத கண்ணும், பாடலுடன் பொருந்தி வராத இசையும் பயன் தராதவையாகும். |
574. | உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினாற் |
| கண்ணோட்டம் இல்லாத கண். |
|
அகத்தில் அன்பையும் இரக்கத்தையும் சுரக்கச் செய்யாத கண்கள் முகத்தில் உள்ளவைபோல் தோன்றுவதைத் தவிர, வேறு எந்தப் பயனும் இல்லாதவைகளாகும். |
575. | கண்ணிற் கணிகலங் கண்ணோட்டம் அஃதின்றேற் |
| புண்ணென் றுணரப் படும். |
|
கருணையுள்ளம் கொண்டவருடைய கண்ணே கண் என்று கூறப்படும். இல்லையானால் அது கண் அல்ல; புண். |