576. | மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ |
| டியைந்துகண் ணோடா தவர். |
|
ஒருவர்க்குக் கண் இருந்தும்கூட அந்தக் கண்ணுக்குரிய அன்பும் இரக்கமும் இல்லாவிட்டால் அவர் மரத்துக்கு, ஒப்பானவரே ஆவார். |
577. | கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார் |
| கண்ணோட்டம் இன்மையும் இல். |
|
கருணை மனம் கொண்டவர்க்கு இருப்பதே கண்கள் எனப்படும்; கருணையற்றோர் கண்ணற்றோர் என்றே கருதப்படுவார்கள். |
578. | கருமஞ் சிதையாமற் கண்ணோட வல்லார்க் |
| குரிமை உடைத்திவ் வுலகு. |
|
கடமை தவறாமையிலும், கருணை பொழிவதிலும் முதன்மையாக இருப்போருக்கு இந்த உலகமே உரிமையுடையதாகும். |
579. | ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப் |
| பொறுத்தாற்றும் பண்பே தலை. |
|
அழிக்க நினைத்திடும் இயல்புடையவரிடத்திலும் பொறுமை காட்டுவது மிக உயர்ந்த பண்பாகும். |
580. | பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்க |
| நாகரிகம் வேண்டு பவர். |
|
கருணை உள்ளமும் பண்பாடும் உள்ளவர்கள், தம்முடன் பழகியவர்கள் நஞ்சு கொடுத்தாலும் அதை அருந்திக் களிப்படைவார்கள். |