61. மடி இன்மை |
601. | குடியென்னுங் குன்றா விளக்கம் மடியென்னும் |
| மாசூர மாய்ந்து கெடும். |
|
பிறந்த குடிப் பெருமை என்னதான் ஒளிமயமாக இருந்தாலும், சோம்பல் குடிகொண்டால் அது மங்கிப் போய் இருண்டு விடும். |
602. | மடியை மடியா ஒழுகல் குடியைக் |
| குடியாக வேண்டு பவர். |
|
குலம் சிறக்க வேண்டுமானால், சோம்பலை ஒழித்து, ஊக்கத்துடன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். |
603. | மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த |
| குடிமடியுந் தன்னினு முந்து. |
|
அறிவும் அக்கறையுமில்லாத சோம்பேறி பிறந்த குடி, அவனுக்கு முன் அழிந்து போய் விடும். |
604. | குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து |
| மாண்ட உஞற்றி லவர்க்கு. |
|
சோம்பேறித்தனமானவர்களின் வாழ்க்கையில் குற்றங்களும் பெருகிடும்; குடும்பப் பெருமையும் சீரழிந்து போய்விடும். |
605. | நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் |
| கெடுநீரார் காமக் கலன். |
|
காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் ஆகிய நான்கும், கெடுகின்ற ஒருவர் விரும்பியேறும் தோணிகளாம்! |