606. | படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார் |
| மாண்பயன் எய்தல் அரிது. |
|
தகுதியுடையவரின் அன்புக்குப் பாத்திரமானவராக இருப்பினும் சோம்பலுடையவர்கள் பெருமை எனும் பயனை அடைவதென்பது அரிதாகும். |
607. | இடிபுரிந் தெள்ளுஞ்சொற் கேட்பர் மடிபுரிந்து |
| மாண்ட உஞற்றி லவர். |
|
முயற்சி செய்வதில் அக்கறையின்றிச் சோம்பேறிகளாய் வாழ்பவர்கள் இகழ்ச்சிக்கு ஆளாவார்கள். |
608. | மடிமை குடிமைக்கண் தங்கிற்றன் னொன்னார்க் |
| கடிமை புகுத்தி விடும். |
|
பெருமைமிக்க குடியில் பிறந்தவராயினும், அவரிடம் சோம்பல் குடியேறி விட்டால் அதுவே அவரைப் பகைவர்களுக்கு அடிமையாக்கிவிடும். |
609. | குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன் |
| மடியாண்மை மாற்றக் கெடும். |
|
தன்னை ஆட்கொண்டுள்ள சோம்பலை ஒருவன் அகற்றி விட்டால், அவனது குடிப்பெருமைக்கும், ஆண்மைக்கும் சிறப்பு தானே வந்து சேரும். |
610. | மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் |
| தாஅய தெல்லாம் ஒருங்கு. |
|
சோம்பல் இல்லாதவர் அடையும் பயன், சோர்வில்லாத ஒரு மன்னன், அவன் சென்ற இடமனைத்தையும் தனது காலடி எல்லைக்குள் கொண்டு வந்ததைப் போன்றதாகும். |