626. | அற்றேமென் றல்லற் படுபவோ பெற்றேமென் |
| றோம்புதல் தேற்றா தவர். |
|
இத்தனை வளத்தையும் பெற்றுள்ளோமேயென்று மகிழ்ந்து அதைக் காத்திட வேண்டுமென்று கருதாதவர்கள் அந்த வளத்தை இழக்க நேரிடும் போது மட்டும் அதற்காகத் துவண்டு போய் விடுவார்களா? |
627. | இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக் |
| கையாறாக் கொள்ளாதா மேல். |
|
துன்பம் என்பது உயிருக்கும் உடலுக்கும் இயல்பானதே என்பதை உணர்ந்த பெரியோர், துன்பம் வரும் போது அதனைத் துன்பமாகவே கருத மாட்டார்கள். |
628. | இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் |
| துன்ப முறுதல் இலன். |
|
இன்பத்தைத் தேடி அலையாமல், துன்பம் வந்தாலும் அதை இயல்பாகக் கருதிக்கொள்பவன் அந்தத் துன்பத்தினால் துவண்டு போவதில்லை. |
629. | இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் |
| துன்ப முறுதல் இலன். |
|
இன்பம் வரும் பொழுது அதற்காக ஆட்டம் போடாதவர்கள், துன்பம் வரும் பொழுதும் அதற்காக வாட்டம் கொள்ள மாட்டார்கள். இரண்டையும் ஒன்றுபோல் கருதும் உறுதிக்கு இது எடுத்துக்காட்டு. |
630. | இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன் |
| ஒன்னார் விழையுஞ் சிறப்பு. |
|
துன்பத்தை இன்பமாகக் கருதும் மனஉறுதி கொண்டவர்களுக்கு, அவர்களது பகைவர்களும் பாராட்டுகிற பெருமை வந்து சேரும். |