பக்கம் எண் :

15

1098.

அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப் 

பசையினள் பைய நகும். 

 

நான்  பார்க்கும்போது  என்  மீது   பரிவு   கொண்டவளாக மெல்லச்
சிரிப்பாள்;  அப்போது,   துவளுகின்ற   அந்தத் துடியிடையாள் ஒரு புதிய
பொலிவுடன் தோன்றுகிறாள்.ஆகியவற்றைக் காணலாம்.
   

ஆ. அணி நலம்
 

பிறிது  மொழிதல்   என்னும்   அணியை    வள்ளுவர்   கையாண்டு
கருத்துரைத்துள்ளார். கலைஞரும் அவ்வணியைப் பின்வரும்  குறளுரையில்
கையாண்டு புதுமை விளைத்திருப்பதைக் காண்க.
 

17.நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.
 

ஆவியான    கடல்நீர்   மேகமாகி   அந்தக்   கடலில்   மழையாகப்
பெய்தால்தான் கடல்கூட வற்றாமல்  இருக்கும்.  மனித  சமுதாயத்திலிருந்து
புகழுடன் உயர்ந்தவர்களும்  அந்தச்  சமுதாயத்திற்கே  பயன்பட்டால்தான்
அந்தச் சமுதாயம் வாழும்.
 

இ. அடைநலம்
 

அடைமொழிகளைச் சேர்ப்பதன் வாயிலாகவே உவமை விளக்கமளிக்கும்
சிறப்பியல்பை அடுத்து வரும் பகுதியிற் காணலாம்.
 

1085.

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்

நோக்கம்இம் மூன்றும் உடைத்து. 

 

உயிர்  பறிக்கும்   கூற்றமோ?    உறவாடும்     விழியோ?   மருட்சி
கொள்ளும்  பெண்மானோ?  இளம்  பெண்ணின்  பார்வை  இந்த  மூன்று
கேள்விகளையும் எழுப்புகிறதே.