636. | மதிநுட்ப நூலோ டுடையார்க் கதிநுட்பம் |
| யாவுள முன்னிற் பவை. |
|
நூலறிவுடன் இயற்கையான மதி நுட்பமும் உள்ளவர்களுக்கு முன்னால் எந்த சூழ்ச்சிதான் எதிர்த்து நிற்க முடியும்? முடியாது. |
637. | செயற்கை அறிந்தக் கடைத்து முலகத் |
| தியற்கை அறிந்து செயல். |
|
செயலாற்றல் பற்றிய நூலறிவைப் பெற்றிருந்தாலும், உலக நடைமுறைகளை உணர்ந்து பார்த்தே அதற்கேற்றவாறு அச்செயல்களை நிறைவேற்ற வேண்டும். |
638. | அறிகொன் றறியான் எனினும் உறுதி |
| உழையிருந்தான் கூறல் கடன். |
|
சொன்னதையும் கேட்காமல், சொந்த அறிவும் இல்லாமல் இருப்போர்க்கு, அருகிலுள்ள அமைச்சர்கள்தான் துணிவோடு நல்ல யோசனைகளைக் கூற வேண்டும். |
639. | பழுதெண்ணும் மந்திரியிற் பக்கத்துள் தெவ்வோர் |
| எழுபது கோடி உறும். |
|
தவறான வழிமுறைகளையே சிந்தித்துச் செயல்படுகிற அமைச்சர் ஒருவர் அருகிலிருப்பதை விட எழுபது கோடி எதிரிகள் பக்கத்தில் இருப்பது எவ்வளவோ மேலாகும். |
640. | முறைப்படச் சூழ்ந்து முடிவிலவே செய்வர் |
| திறப்பா டிலாஅ தவர். |
|
முறைப்படித் தீட்டப்படும் திட்டங்கள்கூடச் செயல் திறன் இல்லாதவர்களிடம் சிக்கினால் முழுமையாகாமல் முடங்கித்தான் கிடக்கும். |