65. சொல்வன்மை |
641. | நாநல மென்னும் நலனுடைமை அந்நலம் |
| யாநலத் துள்ளதூஉம் அன்று. |
|
சொல்வன்மைக்கு உள்ள சிறப்பு வேறு எதற்குமில்லை. எனவே அது செல்வங்களில் எல்லாம் சிறந்த செல்வமாகும். |
642. | ஆக்கமுங் கேடும் அதனால் வருதலாற் |
| காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு. |
|
ஆக்கமும் அழிவும் சொல்லால் ஏற்படும் என்பதால், எந்தவொரு சொல்லிலும் குறைபாடு நேராமல் கவனமாக இருக்க வேண்டும். |
643. | கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் |
| வேட்ப மொழிவதாம் சொல். |
|
கேட்போரைக் கவரும் தன்மையுடையதாகவும், கேட்காதவரும் தேடிவந்து விரும்பிக் கேட்கக் கூடியதாகவும் அமைவதே சொல்வன்மை எனப்படும். |
644. | திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும் |
| பொருளும் அதனினூஉங் கில். |
|
காரணத்தைத் தெளிவாக அறிந்து ஒன்றைச் சொல்ல வேண்டும். அந்தச் சொல் வன்மையைப் போன்ற அறமும், உண்மைப் பொருளும் வேறெதுவும் இல்லை. |
645. | சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை |
| வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து. |
|
இந்தச் சொல்லை இன்னொரு சொல் வெல்லாது என்று உணர்ந்த பிறகே அந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும். |