66. வினைத் தூய்மை |
651. | துணைநலம் ஆக்கந் தரூஉம் வினைநலம் |
| வேண்டிய எல்லாந் தரும். |
|
ஒருவருக்குக் கிடைக்கும் துணைவர்களால் வலிமை பெருகும்; அவர்களுடன் கூடி ஆற்றிடும் நற்செயல்களால் எல்லா நலன்களும் கிட்டும். |
652. | என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு |
| நன்றி பயவா வினை. |
|
புகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்த நிலையிலும் செய்யாமல் அவற்றை விட்டொழிக்க வேண்டும். |
653. | ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்குஞ் செய்வினை |
| ஆஅது மென்னு மவர். |
|
மேன்மேலும் உயர்ந்திட வேண்டுமென விரும்புகின்றவர்கள், தம்முடைய செயல்களால் தமது புகழ் கெடாமல் கவனமாக இருந்திட வேண்டும். |
654. | இடுக்கண் படினும் இளிவந்த செய்யார் |
| நடுக்கற்ற காட்சி யவர். |
|
தெளிவான அறிவும் உறுதியும் கொண்டவர்கள் துன்பத்திலிருந்து விடுபடுவதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபட மாட்டார்கள். |
655. | எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல் |
| மற்றன்ன செய்யாமை நன்று. |
|
‘என்ன தவறு செய்துவிட்டோம்’ என நினைத்துக் கவலைப்படுவதற்குரிய காரியங்களைச் செய்யக்கூடாது. ஒருகால் அப்படிச் செய்து விட்டாலும் அச்செயலை மீண்டும் தொடராதிருப்பதே நன்று. |