666. | எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார் |
| திண்ணியர் ஆகப் பெறின். |
|
எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள். |
667. | உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க் |
| கச்சாணி யன்னார் உடைத்து. |
|
உருவத்தால் சிறியவர்கள் என்பதற்காக யாரையும் கேலி செய்து அலட்சியப்படுத்தக் கூடாது. பெரிய தேர் ஓடுவதற்குக் காரணமான அச்சாணி உருவத்தால் சிறியதுதான் என்பதை உணர வேண்டும். |
668. | கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது |
| தூக்கங் கடிந்து செயல். |
|
மனக்குழப்பமின்றித் தெளிவாக முடிவு செய்யப்பட்ட ஒரு செயலைத் தளர்ச்சியும், தாமதமும் இடையே ஏற்படாமல் விரைந்து நிறைவேற்ற வேண்டும். |
669. | துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி |
| இன்பம் பயக்கும் வினை. |
|
இன்பம் தரக்கூடிய செயல் என்பது, துன்பம் வந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் துணிவுடன் நிறைவேற்றி முடிக்கக் கூடியதேயாகும். |
670. | எனைத்திட்ப மெய்தியக் கண்ணும் வினைத்திட்பம் |
| வேண்டாரை வேண்டா துலகு. |
|
எவ்வளவுதான் வலிமையுடையவராக இருப்பினும் அவர் மேற்கொள்ளும் செயலில் உறுதியில்லாதவராக இருந்தால், அவரை உலகம் மதிக்காது. |