676. | முடிவும் இடையூறும் முற்றியாங் கெய்தும் |
| படுபயனும் பார்த்துச் செயல். |
|
ஈடுபடக்கூடிய ஒரு செயலால் எதிர்பார்க்கப்படும் பயன், அதற்கான முயற்சிக்கு இடையே வரும் தடைகள், அச்செயலாற்றுவதற்கான முறை ஆகிய அனைத்தையும் முதலில் ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும். |
677. | செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை |
| உள்ளறிவான் உள்ளங் கொளல். |
|
ஒரு செயலில் ஈடுபடுகிறவன், அச் செயல்குறித்து முழுமையாக உணர்ந்தவனின் கருத்தினை முதலில் அறிந்துகொள்ள வேண்டும். |
678. | வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள் |
| யானையால் யானையாத் தற்று. |
|
ஒரு செயலில் ஈடுபடும்போது, அச்செயலின் தொடர்பாக மற்றொரு செயலையும் முடித்துக் கொள்வது ஒரு யானையைப் பயன்படுத்தி மற்றொரு யானையைப் பிடிப்பது போன்றதாகும். |
679. | நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே |
| ஒட்டாரை ஒட்டிக் கொளல். |
|
நண்பருக்கு நல்லுதவி செய்வதைக் காட்டிலும் பகைவராயிருப்பவரைத் தம்முடன் பொருந்துமாறு சேர்த்துக் கொள்ளுதல் விரைந்து செய்யத் தக்கதாகும். |
680. | உறைசிறியார் உண்ணடுங்கல் அஞ்சிக் குறைபெறிற் |
| கொள்வர் பெரியார்ப் பணிந்து. |
|
தம்மைவிட வலிமையானவர்களை எதிர்ப்பதற்குத் தம்முடன் இருப்பவர்களே அஞ்சும்போது தாம் எதிர்பார்க்கும் பலன் கிட்டுமானால் அவர்கள் வலியோரை வணங்கி ஏற்றுக் கொள்வார்கள். |