ஈ. உரைக் குறள் |
பாட்டும் குறள்; அதற்குக் கலைஞர் வகுத்த உரையும் குறளாக அமைந்திருப்பதை அடுத்துக் காண்க. |
1305. | நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை |
| பூஅன்ன கண்ணா ரகத்து. |
|
மலர் விழி மகளிர் நெஞ்சில் விளையும் ஊடலே பண்பார்ந்த நல்ல காதலர்க்கு அழகு சேர்க்கும். |
உ. இடைமிடை சொல்நலம் |
இடையில் சில சொற்களைச் சேர்ப்பதன் வாயிலாகக் குறளின் பொருளில் நேரும் முட்டறுக்கும் பெற்றியைப் பின் உள்ள பகுதி காட்டும். |
94. | துன்புறூஉந் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் |
| இன்புறூஉம் இன்சொ லவர்க்கு. |
|
இன்சொல் பேசி எல்லாரிடத்திலும் கனிவுடன் பழகுவோர்க்கு நட்பில் வறுமை எனும் துன்பமில்லை. |
83. | வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை |
| பருவந்து பாழ்படுதல் இன்று. |
|
விருந்தினரை நாள்தோறும் வரவேற்று மகிழ்பவரின் வாழ்க்கை அதன் காரணமாகத் துன்பமுற்றுக் கெட்டொழிவதில்லை. |
1052. | இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை |
| துன்பம் உறாஅ வரின். |
|
வழங்குபவர், வாங்குபவர் ஆகிய இருவர் மனத்திற்கும் துன்பம் எதுவுமின்றி ஒருபொருள் கிடைக்குமானால் அப்பொருள் இரந்து பெற்றதாக இருப்பினும் அதனால் இன்பமே உண்டாகும். |