பக்கம் எண் :

அமைச்சியல்138கலைஞர் உரை

686.

கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்

தக்க தறிவதாந் தூது.

 

கற்றறிவாளனாகவும்,      பகைவரின்     கனல்கக்கும்    பார்வைக்கு
அஞ்சாதவனாகவும்,  உள்ளத்தில்  பதியுமாறு  உரைப்பவனாகவும்,   உரிய
நேரத்தில்  உணரவேண்டியதை  உணர்ந்து கொள்வபனாகவும் இருப்பவனே
சிறந்த தூதனாவான்.
 

687.

கடனறிந்து காலங் கருதி இடனறிந்

தெண்ணி உரைப்பான் தலை.

 

ஆற்றவேண்டிய    கடமையை    அறிந்து,  அதற்குரிய  காலத்தையும்
இடத்தையும் தேர்ந்து, சொல்ல   வேண்டியதைத்  தெளிவாகச்  சிந்தித்துச்
சொல்பவனே சிறந்த தூதனாவான்.
 

688.

தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்

வாய்மை வழியுரைப்பான் பண்பு.

 

துணிவு,    துணை,  தூய  ஒழுக்கம் ஆகிய இம்மூன்றும் தூதுவர்க்குத்
தேவையானவைகளாகும்.
 

689.

விடுமாற்றம் வேந்தர்க் குரைப்பான் வடுமாற்றம்

வாய்சோரா வன்க ணவன்.

 

ஓர்   அரசின்   கருத்தை  மற்றோர் அரசுக்கு எடுத்துரைக்கும் தூதன்,
வாய்தவறிக்கூட,   குற்றம்     தோய்ந்த சொற்களைக்  கூறிடாத   உறுதி
படைத்தவனாக இருத்தல் வேண்டும்.
 

690.

இறுதி பயப்பினும் எஞ்சா திறைவற்

குறுதி பயப்பதாம் தூது.

 

தனக்கு   அழிவே   தருவதாக  இருந்தாலும், அதை எண்ணிப் பயந்து
விடாமல்   உறுதியுடன்   கடமையாற்றுகிறவனே தன்னுடைய தலைவனுக்கு
நம்பிக்கையான தூதனாவான்.