70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல் |
691. | அகலா தணுகாது தீக்காய்வார் போல்க |
| இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார். |
|
முடிமன்னருடன் பழகுவோர் நெருப்பில் குளிர் காய்வதுபோல அதிகமாக நெருங்கிவிடாமலும், அதிகமாக நீங்கிவிடாமலும் இருப்பார்கள். |
692. | மன்னர் விழைப விழையாமை மன்னரான் |
| மன்னிய ஆக்கந் தரும். |
|
மன்னர் விரும்புகின்றவைகளைத் தமக்கு வேண்டுமெனத் தாமும் விரும்பாமலிருத்தல் அவர்க்கு அந்த மன்னர் வாயிலாக நிலையான ஆக்கத்தை அளிக்கும். |
693. | போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின் |
| தேற்றுதல் யார்க்கும் அரிது. |
|
தமக்கு மேலேயுள்ளவர்களிடத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள விரும்புகிறவர்கள், பொறுத்துக் கொள்ள முடியாத குற்றங்களைச் செய்யாமல் இருக்கவேண்டும். அப்படிச் செய்து விட்டால் அதன் பிறகு தம் மீது ஏற்பட்ட சந்தேகத்தை நீக்குவது எளிதான காரியமல்ல. |
694. | செவிச்சொல்லுஞ் சேர்ந்த நகையும் அவித்தொழுகல் |
| ஆன்ற பெரியா ரகத்து. |
|
ஆற்றல் வாய்ந்த பெரியவர்கள் முன்னே, மற்றவர்கள் காதுக்குள் பேசுவதையும், அவர்களுடன் சேர்ந்து சிரிப்பதையும் தவிர்த்து, அடக்கமெனும் பண்பைக் காத்திடல் வேண்டும். |
695. | எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை |
| விட்டக்காற் கேட்க மறை. |
|
பிறருடன் மறைவாகப் பேசிக் கொண்டிருக்கும்போது அதை ஒட்டுக் கேட்கவும் கூடாது; அது என்னவென்று வினவிடவும் கூடாது. அவர்களே அதுபற்றிச் சொன்னால் மட்டுமே கேட்டுக்கொள்ள வேண்டும். |