716. | ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம் |
| ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு. |
|
அறிவுத்திறனால் பெருமை பெற்றோர் முன்னிலையில் ஆற்றிடும் உரையில் குற்றம் ஏற்படுமானால், அது ஒழுக்க நெறியிலிருந்து தளர்ந்து வீழ்ந்து விட்டதற்கு ஒப்பானதாகும். |
717. | கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச் |
| சொற்றெரிதல் முன்னர் இழுக்கு. |
|
மாசற்ற சொற்களைத் தேர்ந்தெடுத்து உரை நிகழ்த்துவோரிடமே அவர் கற்றுத் தேர்ந்த கல்வியின் பெருமை விளங்கும். |
718. | உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன் |
| பாத்தியுள் நீர்சொரிந் தற்று. |
|
உணர்ந்து கொள்ளக்கூடிய ஆற்றல் உள்ளவர்களின் முன்னிலையில் பேசுதல், தானே வளரக்கூடிய பயிர் உள்ள பாத்தியில் நீர் பாய்ச்சுவது போலப் பயன் விளைக்கும். |
719. | புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள் |
| நன்கு செலச்சொல்லு வார். |
|
நல்லோர் நிறைந்த அவையில் மனத்தில் பதியும்படி கருத்துகளைச் சொல்லும் வல்லமை பெற்றவர்கள், அறிவற்ற பொல்லாதோர் உள்ள அவையில் அறவே பேசாமலிருப்பதே நலம். |
720. | அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தர் |
| அல்லார்முன் கோட்டி கொளல். |
|
அறிவுள்ளவர்கள், அறிவில்லாதவர்களின் அவையில் பேசுவது, தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திடும் அமிழ்தம்போல் வீணாகிவிடும். |